Categories
தேசிய செய்திகள்

மைசூரில் தொடங்கியது கோலாகல கொண்டாட்டம்…. நகரமே விழாக் கோலம் பூண்டது….!!!

உலகப்பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

கர்நாடக மாநிலம் மைசூரில் வருடந்தோறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கர்நாடக மாநிலத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.

மகிஷாசூரன் என்ற கொடிய அரக்கனை மைசூரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளை மைசூர் மக்கள் தசராவாக வருடந்தோறும் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.  இத்தசரா விழாவானது மன்னர் காலத்தில் இருந்தே வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1971ஆம் ஆண்டு வரை மைசூர் தசரா விழா மன்னர் குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டு வந்தது.

அதன்பின்னர் 1972ஆம் ஆண்டிலிருந்து கர்நாடக அரசு சார்பில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை மைசூரில் சுமார் 410 ஆண்டுகளாக தசரா விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற இந்த தசரா விழாவை கண்டுகளிக்க கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா அக்டோபர் 7-ந் தேதியான நேற்று தொடங்கி 15-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. மேற்கொண்டு கொரோனா பரவல் காரணமாக மைசூர் தசரா விழா எளிமையான முறையில் நடைபெறும் என்றும், மைசூர் தசரா விழாவை முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைப்பார் என்றும் அம்மாநில அரசு அறிவித்து இருந்தது.

கொரோனா காரணமாக மைசூர் தசரா தொடக்கவிழாவில் மைசூரு தசரா தொடக்க விழாவில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளித்திருந்த அரசு, பின்னர் 400 பேருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதற்காக எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று முன்தினமே மைசூருக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து 8.45 மணிக்குள் துலாம் லக்கனத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளித்தேரில் எழுந்தருளினார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில், சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் தூவியும், குத்துவிளக்கு ஏற்றியும் தசரா விழாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார். இது 411-வது தசரா விழா ஆகும். இந்த நிகழ்ச்சியில் மைசூரு மாவட்ட பொறுப்பட கொள்ள அனுமதி அளித்து இருந்த அரசு பின்னர் 400 பேருக்கு அனுமதி அளித்தது. தசரா விழாவை தொடங்கி வைக்க நேற்று முன்தினமே எஸ்.எம்.கிருஷ்ணா மைசூருவுக்கு வந்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து 8.45 மணிக்குள் துலாம் லக்கனத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளித்தேரில் எழுந்தருளினார். அப்போது கர்நாடக முதல்வர பசவராஜ் பொம்மை முன்னிலையில், சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு மலர் தூவியும், குத்துவிளக்கு ஏற்றியும் தசரா விழாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு நடைபெறும் இவ்விழா 411-வது தசரா விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் மட்டுமே கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. அதிலும் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளும், கோவில் நிகழ்வுகளும் டி.வி மற்றும் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மைசூர் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மந்திரிகள் அசோக், சுதாகர், பைரதி பசவராஜ், நாராயண கவுடா, சுனில்குமார், சசிகலா ஜோலே, சிவராம் ஹெப்பார், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, நிரஞ்சன்குமார், ராமதாஸ், நாகேந்திரா, ஹர்ஷவர்தன், தன்வீர்சேட், மகாதேவ், மாநகராட்சி மேயர் பாலநேத்ரா, கலெக்டர் பகாதி கவுதம், பிரதாப் சிம்ஹா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்றைய தினம் தொடங்கிய தசரா திருவிழா 15-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அன்றைய நாளில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அபிமன்யு யானை மைசூரு அரண்மனையை சுற்றி வலம் வரும். அந்த யானையை பின்தொடர்ந்து மேலும் சில யானைகளும் செல்லும். பொதுவாக ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூர் அரண்மனையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பன்னிமண்டபம் வரை நடக்கும். ஆனால் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூர் அரண்மனை வளாகத்திற்குள்ளாகவே நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையொட்டி நேற்று மைசூர் அரண்மனையில் ஜோடித்து வைக்கப்பட்டு இருந்த சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் உடையார் அமர்ந்து தர்பார் நடத்தினார். அதில் காலை 10.15 மணியில் இருந்து காலை 10.45 மணி வரை இளவரசர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றும் சாமுண்டீஸ்வரி தேவியிடம், இளவரசர் யதுவீர் வேண்டிக்கொண்டார். அதற்கு முன்னதாக நேற்று காலை 5 மணிக்கு மஞ்சள் நீரில் குளித்த இளவரசர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

பிறகு அரண்மனையில் கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவகிரக பூஜை, பாதபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இளவரசர் அமர்ந்திருந்து தர்பார் நடத்தும் சிம்மாசனத்திற்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. தசரா விழாவையொட்டி அரண்மனைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் மன்னர் குடும்பத்தினரும் அரண்மனை ஊழியர்களும் மட்டும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |