வடிவேலு நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரின் நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது.
இதனால், கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை. தற்போது, அந்த தடை நீக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் வடிவேலு படங்களில் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து இவர் நடிக்கின்ற புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தினை சுராஜ் அவர்கள் இயக்க இருப்பதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்ற அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.