Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ப்ப்பா…! மெகா தடுப்பூசி முகாம்…. மத்திய அரசையே திரும்பி பாக்க வச்சிட்டு…. அமைச்சர் பெருமிதம்…!!!

சென்னையில் மாரத்தான் போட்டியானது தனியார் அமைப்பு சார்பில்நடத்தப்பட்டது.  இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கடந்த தடுப்பூசி முகாமில் மழைக்காலங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல் வரும் என்ற தவறான வதந்தியால் குறைவான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து  ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 30 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே இந்த முறை அதிகமான நபர்கள் தடுப்பு சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். இந்நிலையில் தமிழகத்தின் இந்த தடுப்பூசி முகாமினை மத்திய அரசானது திரும்பிப் பார்க்க வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |