பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷாபுரம் கிராமத்தில் பூவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஷ் தெப்பம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட சண்டையால் கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் திரும்பி பரவில்லை. இதனால் விக்னேஷின் தந்தை ராஜாதானி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விக்னேசை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள 60அடி ஆழ கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைதொடந்து அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கிணற்றில் பார்த்தபோது சிறுவனின் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பார்வையிட்டு கிணற்றில் இறங்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டு மேல கொண்டுவந்துள்ளனர்.
மேலும் அந்த உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது இரு தினங்களுக்கு முன்பு காணமல் போல விக்னேஷ் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே சிறுவனின் உடலை தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிர்க்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து நடத்திய விசாரணையில் அதிகமாக செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்த நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.