Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட தமன்னா… இதுதான் காரணமா?…!!!

நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்குகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

Tamannaah Bhatia Looks Breathtakingly Gorgeous In Beige Shimmery Gown In  Latest Bold Photoshoot

இந்நிலையில் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து தமன்னா நீக்கப்பட்டுள்ளார். தமன்னா போன்ற ஒரு முன்னணி நடிகை தொகுத்து வழங்கியும் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி அதிக ரேட்டிங் பெறவில்லை. தற்போது தமன்னாவுக்கு பதில் தொகுப்பாளினி அனுசியாவை மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைத்துள்ளனர்.

Categories

Tech |