தமிழகத்தின் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை காலங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் காய்ச்சல் வரும் என்ற தவறான வதந்தியின் காரணமாக கடந்த தடுப்பூசி முகாமில் மக்கள் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
எனவே வருகின்ற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியில் நடைபெற இருக்கிற 5 வது மெகா தடுப்பூசி முகாமில் 30,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இந்த முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமின் வெற்றி ஒன்றிய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், முதல் தவணையாக 64% இரண்டாவது தவணையாக 22% ஆக உள்ளது. 70% தடுப்பூசியை போட்டு கொண்டால்தான் எந்த அலையாக இருந்தாலும் மக்களால் தப்பிக்க முடியும். மேலும் அந்த இலக்கை அடைவதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும் தமிழ்நாட்டில் 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளார்.