Categories
தேசிய செய்திகள்

கிளாஸ ஒழுங்காக கவனிக்க மாட்டியா…? ஆத்திரத்தில் தாய் செய்த காரியம்… துடிதுடித்த 6 வயது குழந்தை…!!!

கேரளாவில் ஆன்லைன் வகுப்பை கவனிக்காததால் தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் மற்றும் அவருடைய ஆறு வயது குழந்தை இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பாடம் கற்பிக்க படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தை சரிவர கவனிக்காத காரணத்தினால் குழந்தையின் தாயார் குழந்தைக்கு முகம், கால்மூட்டி, அந்தரங்க உறுப்பு போன்ற பல இடங்களில் பழுக்க காயவைக்கப்பட்ட கரண்டியால் சூடு வைத்துள்ளார். இதனை தொடர்ந்து வலியால் துடித்த குழந்தையை அக்கம் பக்கத்து வீட்டார் மற்றும் குழந்தையின் தாய் மாமன் ஆகியோர் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் தாயாரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை ஆன்லைன் வழியில் பாடம் படிக்கும் பொழுது,  சரியாக கவனிக்காததால் குழந்தையை கடுமையாக தாக்கி தீயில் பழுக்க காய்ச்சிய கரண்டியால் உடல் முழுவதும் சூடு வைத்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய்மாமன் கொடுத்த புகாரின் பெயரில் அப்பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குழந்தை குழந்தைகள் நல அதிகாரிகளின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |