கோவை தண்டு மாரியம்மன் கோவில் முன்பு பா.ஜனதாவினர் அனைத்து நாட்களிலும் திறக்கமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவில் முன்பாக கோவில்களை அனைத்து நாட்களும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், எஸ்.ஆர்.சேகர் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் போன்ற பலரும் பங்கேற்றனர்.
இதில் பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், சிலர் சாமி வேடம் அணிந்து மேளதாளத்துடன் வந்து ஆடிப்பாடி கோவிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதற்காகவும், சட்டவிரோதமாக கூட்டத்தை சேர்த்தல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் போன்ற 3 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பந்தய சாலை காவல்துறையினர் பாஜக மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்