ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் 33 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருக்கும் தங்களது மூத்த மகளை பார்ப்பதற்காக சுந்தரராஜனும், விமலாவும் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜனின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுந்தர்ராஜன் தனது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 33 பவுன் தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.