Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை தொடர்ந்து அடுத்த விலை உயர்வு…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதில் கட்டுமான பணிகள் செய்யும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் திடீரென சிமெண்டின் விலை ரூ.70 க்கு உயர்த்தப்பட்டது.

இதுகுறித்து கட்டுமான துறை தமிழக அரசிடம் புகாரளித்த பிறகு சிமெண்ட் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ரூ.60 குறைக்கப்பட்டது. பிறகு கட்டுமானப் பணியாளர்கள் தங்கள் வேலையில் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் திடீரென மீண்டும் சிமெண்டின் விலை ஒரு மூட்டைக்கு ரூ.60 க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்டுமானத் துறையில் உள்ள சிலர் கூறுவது, ஏற்கனவே சிமெண்ட் உயர்ந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தான் சிமெண்ட் விலையை குறைக்கப்பட்டது. தற்போதும் சிமெண்ட் விலை  உயர்த்தப்பட்டதால் மீண்டும் கட்டுமானப் பணிகள் முடங்கி விடும்.

அதுமட்டுமில்லாமல் சிமெண்ட் விலை அதிகரிப்புக்கு நிலக்கரியின் விலை உயர்வு தான் காரணம் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தனர்.

Categories

Tech |