தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தெளிவின்மையால் விரல் ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால் உடனடியாக பொருள்களை அளிக்க வேண்டும். ரேஷன் கடைக்கு வருவோரின் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து கனிவுடன் விரல் ரேகையை சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.