சீமான் & நாம் தமிழர் கட்சி – சல்லி பயலுக என விசிக வன்னியரசு ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு, தமிழ் தேசியம் குறித்து நடத்திய கருத்தரங்கில் தோழர் பொழிலன் அவர்களும், தோழர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களும் பேசினார்கள். தமிழ் தேசியம் எதுவென்று அவர் விளக்கி இருக்கிறார்கள் ? அவ்வளவுதான். இதற்காக அவர் வீட்டிற்குள் சென்று, அவர் குடும்பத்தோடு இருக்கும்போது அவரை அச்சுறுத்தி கருத்தே சொல்ல கூடாது என்கின்ற வகையில் அவரை அச்சுறுத்துவது என்பது ஒரு ஜனநாயகம் இல்லை.
அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வழக்கம்போல போலீஸ் ஒரு கவுன்டர் பெட்டிஷனை வாங்கியுள்ளது. அவர் பேராசிரியர் தமிழ் தேசிய அரசியல் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நாம் தமிழர் கட்சியை போல சல்லி பசங்க இல்லை. அவர் ஒரு பேராசிரியர், முனைவர் பட்டம் பெற்றவர் அப்படிப்பட்ட ஒரு பெரியவர் போய் புகார் கொடுத்தால் போலீஸ் அதன் உண்மை தன்மை அறிய வேண்டும். நான் இரண்டு பேர் மீதும் வழக்குப் போடுவேன் என்றால் இதெல்லாம் என்ன ஒரு அணுகுமுறை என்று தெரியவில்லை.
நம்முடைய டிஜிபி அவர்கள் ரவுடிகளை கைது செய்றோம் என 3000, 4000 பேரை கைது செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் எந்த ரவுடிகளை கைது செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ரவுடிகள் ரவுடித்தனம் செய்பவர்களை கைது செய்யவில்லை. காவல்துறை ரவுடித்தனம் செய்கின்ற இந்த மாதிரி பொறுக்கிகளை கைது செய்யாமல் நாங்கள் ரவுடிகளை கைது செய்கிறோம் என்று சொல்கிறார்கள் அது என்ன என்று எனக்கு தெரியல.
பாகுபாட்டோடு இருக்கின்ற காவல்துறையினரின் செயல்பாட்டை கைவிட்டு, சம்மந்தப்பட்டவர்களோடு சேர்த்து பேராசிரியர் மீதும் வழக்கு தொடுப்பது உண்மையாகவே கண்டிக்கக் கூடியது. தமிழ்நாடு காவல் துறைக்கு நாங்கள் மெத்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று இந்த போராட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் என வன்னி அரசு தெரிவித்தார்.