Categories
பல்சுவை

பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இதுலையே எல்லாம் கிடைக்கும்…..!!!!

ஸ்மார்ட் போன்களில் எல்லாவிதமான வசதிகளும் தற்போது இருக்கிறது. அதில் தனி மனிதனுக்கு தேவையான ஷாப்பிங், பணபரிவர்த்தனை, உணவு ஆர்டர்,கட்டணம், ரீசார்ஜ், மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மொபைலில் ஆப்களாக இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு ஆப் தான் டிஜிலாக்கர்.

அரசுக்கு சொந்தமான இந்த மொபைல் ஆப்பில் ஆதார் முதல் டிரைவிங் லைசென்ஸ் வரை பல்வேறு ஆவணங்களை சேமித்து வைப்பதோடு போக்குவரத்து சோதனைகளிலும் மற்ற இடங்களிலும் இந்த டிஜிலாக்கர் ஆப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பில் இப்போது பிஎப் தேவையும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ராணுவ அதிகாரிகளுக்கான பென்ஷன் செட்டில்மெண்ட் பற்றிய விபரங்கள் இனி டிஜி லாக்கரிலையே கிடைக்கும். இவற்றிற்கான மின்னணு பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் (இபிபிஒ)சேவை டிஜி லாக்கருடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக 23 லட்சம் ராணுவ பென்சனர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் தொடர்பான அனைத்து தகவல்களும் டிஜிலாக்கர்லையே சேமித்து வைக்கப்படும். இவற்றிற்காக அலுவலகத்திற்கு அலைய வேண்டியதில்லை. மேலும் இந்த வசதியின் மூலம் ராணுவ பென்ஷன் அவர்கள் தங்களது பென்ஷன் பைமெண்ட் ஆர்டர் டிஜிலாக்கர் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |