பிரபாகரனுடன் ஒரு போட்டோ வச்சுக்கிட்டு பண்ணுற அலப்பறை தாங்க முடியல என மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,மேதக தலைவர் பிரபாகரனுடன் ஒரு நிமிடம், ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து அவர் பண்ற அலப்பறை தாங்க முடியல. இங்கே இருக்கின்ற அனைவருமே மாவீரன் தலைவர் பிரபாகரனுடன் களமாடியவர்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அன்பு தலைவர் வைகோ அவர்கள் ஏறக்குறைய 56 கவனஈர்ப்பு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, விவாதித்த தலைவர்.
19 மாதம் போடா சிறையில் இருந்தவர். வண்டி காட்டுக்கே சென்று அந்த பாசறையில் இருந்தவர். அண்ணன் தலைவர் திருமா அவர்கள் அதே நிலைபாட்டில் இருந்தவர். ஐயா நெடுமாறன் அவர்கள் தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டவர், தமிழரசு ஐயா என். நடராஜன் அவர்கள் சர்வதேச அளவில் அதைக் கொண்டு சேர்த்தவர், திருமுருகன் காந்தி இது குறித்து ஐ.நா மன்றத்தில் விவாதித்தவர்.
கொளத்தூர் மணி தனது இருப்பிடத்தையே பாசறையாக அமைத்து தந்த தலைவர், கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் அதே நிலையில் இருக்கின்றவர்கள். எனவே இவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்ற போது ஒரு அரைவேக்காட்டுத் தனமாக சீமான் நடந்துகொண்டிருப்பதும், நான் தான் அதற்காக இருக்கிறேன் என்று கூறி ஊர் முழுவதும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதையே வேலையாக கொண்டிருக்கிறார். ஈழத்தமிழர்களுடைய விடுதலையை காட்டி…
ஈழத்தமிழர்களுக்காக நான் போராட்ட களம் அமைக்கிறேன் என்று கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் பணம் திரட்டுகின்ற ஒரே வேலையைத்தான் இந்த கும்பல் செய்துகொண்டிருக்கிறது. பெரியாரை பிஜேபிக்கு பிடிக்காது, நாம் தமிழர் கட்சிக்கு பிடிக்காது. அவ்வளவு பெரிய சிந்தனைவாதிகள் இவர்கள்.. பிஜேபி சொல்கின்ற ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துகின்ற இடத்தில்தான் நாம் தமிழர் கூட்டம் இங்கே திரிந்து கொண்டு இருக்கிறது.