Categories
சினிமா தமிழ் சினிமா

ரேவதி இயக்கத்தில் வெளியான படங்கள்… முதல் படத்துக்கு 3 தேசிய விருது…!!!

பிரபல நடிகை ரேவதி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 1983-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரேவதி. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் நடிகை ரேவதி ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். அதில் முதலாவதாக கடந்த 2002-ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ஆங்கில திரைப்படம் மித்ர் மை பிரெண்ட் . ஷோபனா, ப்ரீத்தி விசா, ரேவதி, நாசர் அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு நேஷனல் அவார்ட் ஆப் பெஸ்ட் பிலிம் விருது கிடைத்தது. இதுதவிர எடிட்டிங்கிற்கு ஒரு தேசிய விருதும், ஷோபனா நடிப்பிற்காக ஒரு தேசிய விருதும் கிடைத்தது.

Revathi returns to Bollywood with '2 States'? | Bollywood News – India TV

இதைத்தொடர்ந்து ரேவதி இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு பிர் மிலேங்க என்கிற ஹிந்தி திரைப்படம் வெளியாகியிருந்தது. எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சல்மான் கான், அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, நாசர், கமலினி முகர்ஜி, ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இதன்பின் மலையாளத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு கேரளா கஃபே என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ரேவதி உட்பட பத்து இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். இந்த படத்தில் மம்முட்டி, ஜெயசூர்யா, பிரித்விராஜ், பகத் பாசில், நித்யா மேனன், ரகுமான், சுரேஷ் கோபி, திலீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 

Categories

Tech |