போதை மருந்து பயன்பாடு விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் (அக்டொபர் 21) நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்ளிட்டோரை இன்று (அக்டோபர் 7) வரை என்சிபி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.. இந்நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு போலீஸ் காவல் முடிந்து, மும்பை நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டனர். அப்போது, ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..
விசாரணைக்காவலுக்கு அனுப்ப வேண்டும் என்ற போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை காலை 11 மணிக்கு நடக்கும் எனவும், போதை மருத்து கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதற்கு முன்னதாக பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.