Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் குழந்தை கடத்தல்….. தமிழர் உட்பட ஐந்து பேர் கைது….!!

பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையத்தில் குழந்தைகள் விற்பனை நடப்பதாக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இரண்டு பேரும் பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த விசாரணையில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த ரஞ்சனா தேசாய் பெங்களூருவைச் சேர்ந்த தேவி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஜனார்த்தனன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து குடிசை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளை கடத்தி செல்வார்கள். இதுதவிர குழந்தைகள் வளர்க்க முடியாமல் சிரமப்படும் தம்பதியை கண்டு அவர்களிடமிருந்து குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனையும் செய்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகள் இல்லாத தம்பதியரை கண்டறிந்து அவர்களிடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு இந்த குழந்தைகளை விற்று வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் ஐந்து பேரும் கொடுத்த தகவலின் பேரில் சுமார் 12 குழந்தைகள் மீட்கப்பட்டு பெங்களூருவில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஸ் பாண்டே நிருபர்களிடம் கூறுகையில் இந்த குழந்தை விற்பனையில் ஒரு பெரிய கும்பலே ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கண்டறிந்து கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Categories

Tech |