Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் லாரி பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…. 9 பேர் பலியான பரிதாபம்…!!!

உத்தரபிரதேசத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் பேருந்து ஒன்று டெல்லியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாபுர்ஹியா கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்-மந்திரியாக யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |