தமிழகத்தில் கடந்த 2016-2017 கல்வியாண்டில் அரசு கோட்டாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு மாநில அரசு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் மருத்துவ படிப்பிற்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுது.அதன் பிறகு 2017-2018 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நீட்தேர்வு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மருத்துவ படிப்பிற்க்கு மாநில அரசு வழங்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக 2020ஆம் ஆண்டு 463 அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையில் மருத்துவ மேற்படிப்பிற்காக 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவர் மேற்படிப்பிற்கு எந்த ஒரு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு தற்போது உள்ள கல்வியாண்டில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நடைபெற்ற மருத்துவ மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.