Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலவாரியம்!”.. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பிற்கு பாராட்டு..!!

வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்,  சவுதி அரேபியா, போன்ற வளைகுடா நாடுகள் உள்பட, உலக நாடுகள் பலவற்றில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தான் இந்திய நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். உலக நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள், பல வருடங்களாக, பல கோரிக்கைகள் முன்வைக்கிறார்கள்.

அதாவது, ஒரு தமிழக தொழிலாளர், வெளிநாட்டில் பணிபுரியும் போது இறக்க நேரிட்டால், அவரது உடலை, சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல தேவையான செலவை அரசாங்கம் ஏற்க வேண்டும்  என்றும், சொந்த நாடு திரும்பும் தமிழர்களுக்கு, தொழில் தொடங்குவதற்காக கடன் உதவி அளிக்க வேண்டும் என்றும், போலியான ஏஜென்ட்டுகளை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், வெளிநாடுகளுக்கு  செல்ல தொழிலாளர்களுக்கு, விமான கட்டணத்தில் சலுகை கொடுக்க வேண்டும் என்றும், “வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம்” அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து, துபாயில் வாழும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளதாவது, ‘‘எங்களது  கோரிக்கைகளை 2 வருடங்களுக்கு முன் துபாய்க்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் மனுவாக கொடுத்தோம்.

ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களின் நிலை குறித்து அறிந்த தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக, ‘புலம் பெயர் தமிழர் நலவாரியம்,’ என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு, வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |