விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 4 சீசன்களை கடந்து அக்டோபர் 3 அன்று 5வது சீசனை கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் திருநங்கையான நமீதா மாரிமுத்துவும் ஒருவர். பிக் பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக பங்கேற்பது இதுவே முதல்முறை.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாலினம் என்பது ஆண் பெண் இருவருக்கும் மட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவருக்கும் உரியது என்பதை விஜய் தொலைக்காட்சி உணர்ந்து மேடையேற்றி வாய்ப்பு கொடுத்ததற்கு தேர்வுக் குழுவிற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாலினம் – ஆண், பெண்ணுக்கு மட்டுமானது அல்ல மூன்றாம் பாலினத்தவருக்கும் உரியது என்பதை உணர்ந்து – மேடை ஏற்றி வாய்ப்பை உருவாக்கிய @vijaytelevision #BiggBossTamil5 தேர்வு குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏🏼👏🏼
— Aari Arujunan (@Aariarujunan) October 5, 2021