திரையுலகில் பிரபலமாக இருந்து காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா-சமந்தா தம்பதியினர் சமீபத்தில் தங்கள் விவாகரத்து பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது அவர்களுக்கு வருத்தத்தை கொடுத்ததோ இல்லையோ அவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்து விட்டார்களே என்று பல ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் சமந்தாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. விவாகரத்து பற்றிய செய்திகளுக்குப் பிறகு முதல் முறையாக வெளியில் வந்த சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது சமந்தாவின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
. @Samanthaprabhu2's Latest ❤️#SamanthaRuthPrabhu #Samantha pic.twitter.com/Vb1IrpTw5K
— Trends Samantha™ (@Trends_Samantha) October 5, 2021