மரத்தில் ஏறியபோது மின்சார கம்பி உரசி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள கீழபூசணூத்து பகுதியில் சின்னப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்பாண்டியன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்பாண்டியன் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் ஆடுகளுக்கு தழைகளை பறிப்பதற்காக ஏற்றியுள்ளார். அப்போது மரத்தின் அருகே இருந்த மின்கம்பி எதிர்ப்பாராத விதமாக அருண்பாண்டியன் மீது உரசியுள்ளது.
இதில் மரத்தில் இருந்து கீழே விழுந்து சிறுவனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு கடமலைகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக அருண்பாண்டியன் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வருசநாடு காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.