தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. இந்நிலையில் மக்கள் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து கழகம் 250 பேருந்துகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியது, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை மக்கள் அதிக அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்ததால் அவர்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து 9 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற இரண்டாம் வாக்குப்பதிவு தேர்தலின் போது 500 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கும்பகோணம் மாவட்ட போக்குவரத்து கழகம் 200 பஸ்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து கழகம் 300 பேருந்துகளும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.