சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியானது வருகின்ற அக்டோபர் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இப்போட்டிக்கான ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றனர் .அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தேர்வுக் குழு மூலம் இத்தொடருக்கான தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழக அணியின் கேப்டனாக முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் துணை கேப்டனாக விஜய் சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .இதையடுத்து ஐபிஎல் தொடரில் இரண்டாம் பகுதி ஆட்டத்தில் காயம் காரணமாக விலகிய தமிழக வீரர் நடராஜன் மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அணி : தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், சந்தீப் எஸ் வாரியர், ஆர் சாய் கிஷோர், அபராஜித், என் ஜெகதீசன், எம் அஷ்வின், ஷாருக் கான், ஹரி நிஷாந்த், எம் சித்தார்த், கங்கா ஸ்ரீதர் ராஜு, எம் முகமது, ஜே கவுசிக், ஆர் சஞ்சய் யாதவ், ஆர் சிலம்பரசன், ஆர் விவேக் ராஜ், பி சாய் சுதர்ஷன், பி சரவண குமார்.