Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : வெற்றி கணக்கை தொடருமா பெங்களூர் ….? ஹைதராபாத் அணியுடன் இன்று மோதல் ….!!!

2021 ஐபில் தொடரில் இன்று நடைபெறும்  52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ,கேன்.வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன .இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளே ஆப்  சுற்றுக்கு முன்னேறி உள்ளது .அதே சமயம் 12 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது .இதனால் பெரிய வாய்ப்பை தவற விட்டது.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள போட்டியில் 8 முறை பெங்களூர் அணியும், 10 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பிளே ஆப்  சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30  மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது.

Categories

Tech |