மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும், இந்திய அளவில் மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு. தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
கல்வி வணிக மயமாகி வருகிறது மற்றும் மாநில அரசுகளுக்கான உரிமைகள் பறிக்கப்படும் வகையில் இந்திய ஒன்றிய அரசு கல்வித் தளத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. ஒத்திசைவு பட்டியலில் கல்வி என்கிற அதிகாரம் கல்வி தொடர்பான அதிகாரம், ஒத்திசைவு பட்டியிலில் இடம்பெற்றிருந்தாலும் இந்திய ஒன்றிய அரசே அத முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதன் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை அதை திணிக்கின்றது.
கல்வியை ஒத்திசைவு பட்டியலில் இருந்து எடுத்து மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். கல்வியை ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரையில் கட்டணம் இல்லாமல் வழங்குகின்ற ஒரு அரசுதான் மக்கள் நலனை காக்கும் அரசு. கல்வியை வணிக மயமாக்குவதில் இருந்து விடுவித்து கட்டணமின்றி மக்கள் படிக்கக்கூடிய வகையில் அதை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என திருமாவளவன் தெரிவித்தார்.