திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலானது 2023-ம் ஆண்டு நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது பாஜகவை தோற்கடித்தது. இதனால் பலரும் தங்களது எதிர்கால அரசியல் வாழ்க்கை நலனை எண்ணி பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றார்கள். இந்த வகையில் திரிபுரா மாநில பாஜக எம் எல் ஏ ஆசிஷ் தாஸ் என்பவரும் தனது கட்சியான பாஜகவிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி சந்தித்து பேசினார். இதற்கு முன்பு அவர் கலிகட் எனுமிடத்தில் யாகம் வளர்த்து மொட்டை அடித்துக்கொண்டு கங்கை ஆற்றில் புனித நீராடினார். இதுதொடர்பாக கூறியவர், “நான் என்னை திரிணாமுல் கட்சியில் சேர்வதற்கு முன்பாக தூய்மைப்படுத்தி கொள்ள விரும்பினேன். அதற்காகவே யாகம் வளர்த்து பூஜை செய்து மொட்டையடித்து புனித நீராட்டினேன்” என்று கூறினார்.