வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்தவர்களை தலீபான்கள் கொன்று சடலமாக பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள Herat மாகாணத்தில் obe மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இரண்டு திருடர்களின் சடலங்களானது ஜேசிபி வாயிலாக தொங்கவிடப்பட்டுள்ளது. அதிலும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களை எச்சரிக்கும் விதமாக தான் பொது இடத்தில் சடலங்களை தலீபான்கள் தொங்கவிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இது குறித்து Herat மாகாண கவர்னரான Maulvi Shirahmad Ammar தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக நேற்று முன்தினம் இருவர் முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே இருவரையும் வீட்டின் உரிமையாளர் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் இருவரும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக அவர்களை தலீபான்கள் கொன்று சடலமாக பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் பொது இடத்தில் சடலங்கள் தொங்கவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.