மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நிட்வால்டன் மாநிலத்தின் Wolfenschiessen கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி ஒன்றின் நிர்வாகம் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆபத்தான விளையாட்டு குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இருப்பினும் மாணவர்கள் இந்த ஆபத்தான விளையாட்டு குறித்த எந்தவொரு கவலையுமின்றி இருப்பதாக ஊடக கல்வியாளரான Joachim Zahn தெரிவித்துள்ளார்.
அதிலும் இந்த விளையாட்டானது மூச்சை திணறவைக்கும் ஆபத்தான ஒன்றாகும். இதனால் பல சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 10 வயது சிறுமியும் இதன் காரணமாக உயிரிழந்துள்ளாள். இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல சிறுவர்கள் காயமடைந்ததை அறிந்து தான் பள்ளி நிர்வாகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விளையாட்டானது பள்ளி மாணவர்களிடையே அதிகமாக பரவி வருவதையும் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக இந்த விளையாட்டானது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கும் என்று பள்ளி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதன் காரணமாக மாணவர்களிடம் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.