Categories
அரசியல்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மிரட்டி மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக பறித்துள்ளது – ஜோதிமணி எம்.பி

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மிரட்டி மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக பறித்துள்ளது என ஜோதிமணி எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சேர்ந்த காங்கிரஸ் மாநில தலைவர் இங்கே இருக்கிற மூத்த தலைவர்கள் சேர்த்து கூட்டணி முடிவெடுப்பார்கள். எங்களை பொறுத்தவரையில் கட்சியை உள்ளாட்சி தேர்தலில் களத்தில் தயார் நிலையில் வைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். பாண்டிச்சேரியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தான் இன்றைக்கும் முதன்மையான கட்சி.

கடைசி கிராமம் வரைக்கும்… பாண்டிச்சேரி முழுவதும் தொண்டர்கள் இருக்கின்ற கட்சி. நாங்கள் தோல்வியடைந்த தேர்தலில் கூட 29 சதவீதம் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு இருந்திருக்கிறது. தொடர்ந்து வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மக்களுக்கு பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இன்றைக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் நடந்தால்கூட எப்படி தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமையாக இருந்து தேர்தலில் தோல்வியடைந்து, கட்சியும்  கரைகின்ற நிலைமையில் இருக்கிறதோ… அதேபோல என்.ஆர். காங்கிரஸும் துரதிஸ்டவசமாக பாண்டிச்சேரியில் பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமையாக இருப்பதை நம்ம பார்க்கிறோம்.

குறிப்பாக ராஜ்ய சபா தேர்தலில் என்.ஆர். காங்கிரசை மிரட்டியோ, கையை திருகி பிடுங்கியோ தான் ராஜ்ய சபை உறுப்பிரை பாரதிய ஜனதா சார்பில் பாண்டிச்சேரியில் தேர்ந்து எடுத்துள்ளார்கள். இது பாண்டிச்சேரி மக்களுக்கு வந்து ரொம்ப விரோதமான ஒரு அரசு  ஆட்சியில் இருக்கிறது என விமர்சித்தார்.

Categories

Tech |