தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகரான சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் முதன் முதலில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகமானார். ஆதித்யா வர்மா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.
இதனிடையே துருவ் விக்ரம் தாடி மற்றும் மீசை இல்லாமல் யார் என்று அடையாளம் தெரியாதவாறு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படம் பெண்கள் மனதை கவர்ந்து இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த இவரின் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் லைக்ஸ்கள் குவிந்த வண்ணமகா உள்ளது.