ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை சுஜித்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வருத்தத்தை பல இடங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக்-ம் தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் வந்த ஒரு காட்சியில் நடிகர் விவேக் போர்வெல்லை மூடி வைக்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதை தற்போது நடக்கும் சூழலுடன் ஒப்பட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2010ல் வந்த பலே பாண்டியா படத்தில் ஆழ் துளைக் கிணறு பற்றி, சொன்னேன். ஆனால் இன்று வரை அந்த மெத்தனம் அப்படியே இருப்பது மிக மிக வேதனையான அவலம். 😭 https://t.co/byttXlaen1
— Vivekh actor (@Actor_Vivek) October 27, 2019