உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது அக்டோபர் 3ஆம் தேதி காரில் சென்று மோதியதால் 4 விவசாயிகள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொடர்ந்த மோதலினால் இன்றுவரை 9 பேர் இறந்துள்ளனர். ஆனால் அஜய் மிஸ்ரா, அவ்விடத்தில் தனது மகன் இல்லை என்று மறுத்துள்ளார்.
இதனையடுத்து இவரது பெயரானது முதல் தகவல் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் விவசாயிகளின் மீது காரை ஏற்றிய செயலின் வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். மேலும் அதில் “லக்கிம்பூர் கெரி மனதை உருக்கும் காட்சிகள். இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் மோடி அரசானது அமைதி காப்பது அவர்களின் உடந்தையை உறுதி செய்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
TW: Extremely disturbing visuals from #LakhimpurKheri
The silence from the Modi govt makes them complicit. pic.twitter.com/IpbKUDm8hJ
— Congress (@INCIndia) October 4, 2021