Categories
உலக செய்திகள்

தலீபான்களுடன் நடைபெற்ற போர்…. அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தான்…. அகதி அந்தஸ்து கொடுக்க ஆதரவு….!!

தலீபான்களுடன் நடைபெற்ற போரின்போது அமெரிக்க படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அகதி அந்தஸ்து கொடுப்பதற்கு அந்நாட்டை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக தங்கி இருந்த அமெரிக்க படையினர் கடந்த ஆகஸ்ட் இறுதியில் முழுமையாக திரும்பப் பெறப்பட்டனர். இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு பணிகளில் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து தலீபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்க படையினருக்கு உதவிய ஆப்கான் மக்களுக்கு ஆபத்து உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பின் ஆப்கான் மக்களை தங்கள் நாட்டில் குடியேற்ற அமெரிக்க முடிவு செய்தது.

அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் அமெரிக்காவுக்கு முதல் கட்டமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க படையினருக்கு உதவிய ஆப்கான் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கி அவர்களை அந்நாட்டில் குடியேற்றுவது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடைபெற்றது. இந்தக் கருத்துக் கணிப்பை அசோசியேட்டட் பிரஸ், பொது விவகாரங்கள் ஆன என்.ஓ.ஆர்.சி. மையம் போன்றவை இணைந்து நடத்தியது. அப்போது ஆப்கானை சேர்ந்த மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு 72 சதவீத அமெரிக்கர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். ஆகவே கட்சி வேறுபாடுகளை தாண்டி ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் 9 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |