ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று நடிகரும் , இசையமைப்பாளருமான GV பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 52 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 88 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் ஆழ்துளை கிணற்றுக்கருகே 100 அடி ராட்ஷச கிணறு தோண்டி அதன் வழியே தீயணைப்பு படையினர் சென்று குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 30 அடிக்கும் கீழ் பாறைகள் அதிகமாக இருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவதாக ஒரு ரிக் வண்டி கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணியில் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் நடிகரும் , இசையமைப்பாளருமான GV பிரகாஷ் தனது ட்வீட்_டர் பக்கத்தில் தடைகளைத் தாண்டி மீண்டு வாடா என்று பதிவிட்டுள்ளார்.
தடைகளைத் தாண்டி
மீண்டு வாடா 😭#savesurjeeth#PrayForSujith .— G.V.Prakash Kumar (@gvprakash) October 27, 2019