Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும் நாளையும் செம கனமழை…. “சென்னையில் 2 நாட்கள் தொடரும்”… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னை பொருத்தவரை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.. அவ்வப்போது கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது..

இந்த நிலையில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திண்டுக்கல் கோவையில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் சென்னை பொருத்தமட்டில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது..

 

Categories

Tech |