Categories
உலக செய்திகள்

சமூக வலைதளங்கள் திடீர் முடக்கம்..! மன்னிப்பு கோரிய ஊடகங்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்கள் நேற்று திடீரென சமூகவலைதளம் முடங்கியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் நேற்று மாலை சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியது. மேலும் பயனாளர்கள் இரவிலும் சமூக வலைதளம் முடக்கம் தொடர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களை எப்போதும் போல் பயனாளர்களால் பயன்படுத்த இயலவில்லை. இதற்கிடையே பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இன்று அதிகாலை மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

இந்த நிலையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் சமூக வலைதள முடக்கத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது. அதிலும் வாட்ஸ்அப் தனது டுவிட்டர் பக்கத்தில் “வாட்ஸ் அப்பை இன்று பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் மெதுவாக மற்றும் கவனமாக மீண்டும் வாட்ஸ் அப்-ஐ செயல்படுத்த தொடங்கியுள்ளோம். எனவே பொறுமை காத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=10113957526871061&id=4&sfnsn=wiwspwa

அதேபோல் நாங்கள் தகவல்கள் பகிரப்படும் போது அதனை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருப்போம்” என்றும் பதிவிட்டுள்ளது. இதற்கிடையே தனது பேஸ்புக் பக்கத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் “வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், மெசஞ்சர் மீண்டும் இப்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. திடீரென ஏற்பட்ட இடையூறுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |