Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏறி இறங்கிய லாரி…. உடல் நசுங்கி பலியான நபர்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கபட்டவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை மாவட்டத்திலுள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் விநியோகம் செய்யும் கம்பெனி ஒன்று இருக்கிறது. இந்த கம்பெனி வளாகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் எனவும், அப்போது அங்கு தண்ணீரை ஏற்ற வந்த லாரி அவர் மீது ஏறி இருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து பலியான அந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த சம்பவத்திற்கு காரணமான லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |