பிரியங்கா காந்தியின் செலெக்டிவ் தைரியம் ராஜஸ்தான் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கக்கூடிய நிலமாக இருக்கட்டும், நகையாக இருக்கட்டும் இந்த மாதிரி எது கொடுத்தாலும் அது பக்தியின் காரணமாக இறைவனுக்கு கொடுப்பது, அந்த இறைவனுக்கு கொடுப்பது என்பது மக்களுடைய நலனுக்காக செய்யக்கூடிய காரியம் தான். அதனால் பக்தர்களுடைய உணர்வுகளை பாதிக்காத வகையில் தான் இந்து அறநிலைத்துறை வேலை செய்ய வேண்டுமே, தவிர இவர்களுடைய விருப்பத்திற்காக அந்த மாதிரி வேலைகளில் ஈடுபட கூடாது.
ஒரு அரசியல் கட்சி தலைவர்கள், அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளை வைத்து விமர்சனம் செய்வது. நாங்கள் அரசியல் ரீதியாக தான் விமர்சனம் வைக்கின்றோம். இதே தைரியம் திருமதி பிரியங்கா காந்தி அவர்களுக்கு இருந்தால்…. நான் இப்போது கொடுக்கிறேன்.. லிஸ்ட் ராஜஸ்தானில்… எத்தனை சிறுமிகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள் ? எத்தனை குற்றச்செயல்கள் இன்று அதிகமாக நடந்து கொண்டு இருக்கின்றது என.. இந்த தைரியமும் எல்லாம் ஏன் உபிக்கு மட்டும் வருது, ராஜஸ்தான் ஏன் போக மாட்டேங்குது, ஏன் மஹாராஷ்டிராவுக்கு போக மாட்டேங்குது.
செலக்டீட் தைரியத்தை ராகுல் காந்தி திரும்பி பார்க்கவேண்டும். உத்தரப்பிரதேஷத்தின் சட்ட ஒழுங்கு, அங்கு இருக்க கூடிய மாபியாக்கள் கைது ஒவ்வொன்றையும் புள்ளி விவரங்களோடு எடுத்து வைக்க முடியும். கடந்த 4வருடங்களாக தொழில் வளர்ச்சியில் உத்திரபிரதேசம் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கின்றது. அங்க பவர் லைன் என்று ஓன்று இருக்கின்றது. பெண்கள் எந்த பாதிப்பு வந்தாலும் தொடர்பு கொள்ளலாம்.
நேரடியாகவே நான் அதையெல்லாம் பார்த்துள்ளேன். எந்த அளவுக்கு அங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றது என எந்த சர்வே எடுத்து பார்த்தாலும் உத்தரபிரதேசம் எந்த இடத்திலும் சளைத்தது இல்லை.அதனால் அவர்களின் செலக்ட் தைரியத்தை உத்தரப்பிரதேஷத்தில் காட்டாமல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்திலும் காட்டினாள் நன்றாக இருக்கும் என விமர்சித்தார்.