14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன.
14 வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதனிடையே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே சுற்று வாய்ப்பை இழந்து விட்டது .இதனால் மீதமுள்ள ஒரே ஒரு ப்ளே ஆஃப் வாய்ப்புக்காக மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 5 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது .அதேபோல் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 5 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் அதே நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்ததால், வெற்றி பெறும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .எனவே பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் தொடங்குகிறது.