சிஎஸ்கே அணிக்கெதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 50 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – டு ப்ளஸிஸ் ஜோடி களமிறங்கினர்.இதில் டு ப்ளஸிஸ் 10 ரன்னில் ஆட்டமிழக்க ,அவரை தொடர்ந்து ருதுராஜ் 13 ரன்னில் வெளியேறினார்.இதன்பிறகு களமிறங்கிய ராபின் உத்தப்பா 19 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மொயின் அலியும் 5 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து கேப்டன் தோனி -ராயுடு ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இதில் கேப்டன் தோனி 18 ரன்னில் வெளியேற , மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அம்பத்தி ராயுடு 55 ரன்னுடன் இறுதிவரை அட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது . இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.
இதில் தொடக்க வீரர்களாக பிரித்திவி ஷா – ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். இது பிரித்வி ஷா 18 ரன்களில் ஆட்டமிழக்க ,பொறுப்புடன் விளையாடிய தவான் 39 ரன்னில் வெளியேறினார் .இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இறுதியில் களமிறங்க ஹெட்மையர் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் .இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது