Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 5” மிலாவை நிராகரித்த விஜய் டிவி…. காரணம் இதுதான்….!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து நேற்று முன்தினம் ஐந்தாவது சீசனை கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் மிலா பங்கேற்பார்கள் என்று பல தகவல்கள் வெளியானது ஆனால் 18 போட்டியாளர்களில் மிலா இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பிக்பாஸ் பற்றி மட்டும் பேச வேண்டாம் என கூறி முடித்துவிட்டார்.

இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில விதிமுறைகள் இருந்துள்ளது. அதன்படி ஐந்தாவது சீசனில் ஒரு திருநங்கை மட்டுமே போட்டியாளராக பங்கேற்க முடியும். எனவே மிலாவை விட திறமைசாலி என்று நமீதா மாரிமுத்துவை விஜய் தொலைக்காட்சி தேர்ந்தெடுத்துள்ளது. அதற்கு காரணம் 2014ஆம் வருடம் திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை மற்றும் 2018 ஆம் வருடம் மிஸ் இந்தியா போன்றவற்றில் நமிதா மாரிமுத்து வெற்றி பெற்றதுதான்.

Categories

Tech |