Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாடே தீபாவளி கொண்டாட்டம் ….. தமிழகம் சுர்ஜித்_காக போராட்டம் …. ராகுல் ட்வீட் ..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித்_க்காக தனது வேதனையை ராகுல் காந்தி ட்வீட்_டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 49 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.  முதலில் வந்த ரிக் வண்டியில் தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கையில் இரண்டாவதாக ஒரு ரிக் வண்டி கொண்டு வரப்பட்டுள்ளது.

Image result for சுர்ஜித் ராகுல்

ரிக் வண்டி 10 மணி நேரம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இதுவரை 30 அடித்தான் தோண்டியுள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பும் சுர்ஜித் எப்போது மீண்டு வருவான் என்பதே எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடே தீபாவளியைக் கொண்டாடிவரும்  நிலையில், தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுர்ஜித் என்ற குழந்தையை மீட்க காலத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தையைக் கூடிய விரைவில் மீட்டு அவர்களின் பெற்றோர்களுடன் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |