Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. 3 பேர் மீது வழக்கு பதிவு…. தேடுதல் வேட்டையில் போலீஸ்….!!

தந்தை மகனை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல தேவநல்லூர் பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அவ்வூரில் நடந்த கொடை விழாவில் சொக்கலிங்கத்தின் மகனான சந்தனகுமார் என்பவருக்கும் அதே ஊரில் வசிக்கும் நெல்லையப்பனின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து அவரது தந்தை நெல்லையப்பன், தாயார் லட்சுமி ஆகியோர் சந்தன குமாரையும் அவரது தந்தை சொக்கலிங்கத்தையும் அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். மேலும் இசக்கிமுத்து சந்திரகுமாரின் தலையில் அரிவாளால் வெட்டி மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சந்திரகுமார் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சொக்கலிங்கம் களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெல்லையப்பன், அவரது மனைவி லட்சுமி, மகன் இசக்கிமுத்து ஆகியோரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |