விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் உள்ள சான் டொனேட்கோ நகரில் மிலன் லினேட் விமான நிலையம் அமைத்துள்ளது. இங்கிருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 2 விமானிகள் உட்பட மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இஞ்சின் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் விமானமானது ஆல் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை பற்றி தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.