Categories
சினிமா தமிழ் சினிமா

”ருத்ர தாண்டவம்”படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா. வெளியான ரிப்போர்ட்…!!!

ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில்  ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான்.பிரபல இயக்குனர் கவுதம் மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  இதனையடுத்து, இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் முதல் நாளிலேயே 1.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |