Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கு” மாணவிக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியில் பழனிச்சாமி-ஜோதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழரசி, தாரணி ஆகிய 2 மகள்களும், அய்யப்பன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் மாணவி தாரணி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 நாட்களாக தாரணி அசதியாக இருந்தார். இதனையடுத்து அவரது தந்தை தாரணியிடம் ஏன் அசதியாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு தாரணி எனக்கு ஒன்றும் இல்லை என்று தந்தையிடம் கூறி விட்டு எதுவும் சாப்பிடாமல் இரவு தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மாணவி தாரணி தனது பெற்றோரிடம் காய்ச்சல் அடிப்பதாக கூறியுள்ளார். இதனால் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் தாரணியை சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தாரணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருப்பதால் மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பெற்றோர் தாரணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் தாரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |