Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

மயங்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் கோவிந்தன் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் சுப்பிரமணியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை அடிக்கடி சாந்தி வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கமாக இருந்தது. இதேபோன்று அந்த குழந்தை சாந்தி வீட்டுக்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு சென்ற சுப்பிரமணியசாமி குழந்தையிடம் எதற்காக இங்கு வந்து விளையாடுகிறாய் என்று கூறி அடித்ததாக தெரிகிறது.

இதனால் சாந்தி குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள்..? எங்கள் வீட்டிலிருந்து விளையாடினால் என்ன என்று சுப்பிரமணியசாமியிடம் கேட்டுள்ளார் . இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாந்தி திடீரென மயக்கமடைந்து வீட்டில் விழுந்துவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சாந்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |