2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் அறிவித்தனர். அதில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டம் பட்டாபோஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டா போஷியன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் மிக முக்கியமான துறையாக இருந்து வருகிறது மருத்துவத்துறை.. ஆகவே மருத்துவதுறையை பொருத்தவரை இவர்கள் மிகவும் முக்கியமான பங்களிப்பை செய்து இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது..
உலகம் முழுவதும் சென்ற வருடம் மற்றும் இந்த வருடம் கொரோனாவில் இருந்து உயிர்களை காப்பதற்காக மருத்துவத்துறை முன்னணியில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறது. எனவே அந்த துறையின் சார்பாக யாருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பது மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் உடல் வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய (சென்சார்) கருவி கண்டுபிடித்ததற்காக டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டா போஷியன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.மருத்துவ துறைக்கான நோபல் பரிசை இருவருமே பகிர்ந்து கொண்டுள்ளனர்..
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது.. அதன் காரணமாக காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு ஒரே நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருந்தது..
அத்தகைய நிலையில்தான், மருத்துவ துறைக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என்று மிகவும் ஆர்வத்துடன் உலக அளவிலே விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர்.. அந்த சமயத்தில் ‘நோ டச்’ என்ற முறையில் ஒருவரை தொடாமலேயே சென்சார் முறையில் உடல் வெப்பம், வலி, அழுத்தம் ஆகியவற்றை கண்டறிவதற்கான கருவியை இவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.. இதனால் தான் இவர்களுக்கு இந்த முக்கிய பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது..